Posted in BALAJARTS

காஞ்சிபுரம்

பாலாற்றின் கரையில் அமைந்துள்ள இந்நகரம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.

வரலாறு:

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் காஞ்சி நகரம் கச்சி என்றும் கச்சிப்பேடு என்றும் வழங்கி வந்தது. ‘காஞ்சனம்’ என்ற பெயரில் இருந்து மருவி ‘காஞ்சி’ ஆனது. காஞ்சனம் என்றால் பொன்னாலான் நகரம் என்று பொருள். அந்நாளில் காஞ்சி நகரம் பெரும் சீரும் சிறப்போடு இருந்ததை இந்த சொல் குறிக்கிறது. சங்கக்காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த காஞ்சியையே பல்லவர்கள் தங்களின் தலைநகராய்க் கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் காஞ்சியைப் பல்லவேந்திரபுரி என்றழைத்தனர். இவர்கள் காலத்தில் பனைமலை தலகிரீஸ்வரர் கோயில், மாமல்லபுரக் கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில் ஆகியன கட்டப்பட்டன. பல்லவ அரசு கி.பி. 949க்குப் பிறகு நிலைகுலைந்தது. காஞ்சியை இராட்டிரகூட மன்னன் கைப்பற்றி ஆண்டான்.
பின்னர் காஞ்சி சோழநாட்டின் ஒரு பகுதியாயிற்று. சோழர் காலத்தில் இதற்குத் தொண்டைமண்டலம் என்று பெயரிடபபட்டது.
சோழர்களின் ஆட்சி 13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் வீழ்ச்சியுறவே, இப்பகுதியை காகாதியர் தம் வசப்படுத்தினார்.
பின்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் பேரரசாகத் திகழ்ந்த விஜயநகர ராஜ்ஜியத்தில் 1393 இல் காஞ்சிபுரம் மாவட்டம் இணைக்கப்பட்டது. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்த சோழர் காலத்திலும், இவர்களுக்குப்பின் ஆட்சி புரிந்த விஜயநகர ஆட்சியிலும் புதிய ஆலயங்களின் கட்டுதலும், ஆலயங்களின் விரிவு படுத்தலும் மேற்கொள்ளப்பட்டது. ஏகம்பரநாதர் கோயிலுக்கு, கிருஷ்ணதேவ ராயர் கோபுரம் கட்டித்தந்தார். விஜயநகரப் பேரரசு முகமதிய மன்னர்களால் 1565 இல் வீழ்ச்சியுற்றது.
விஜயநகர ஆட்சி வீழ்ந்தபின், காஞ்சியில் பெருங்குழப்பம் நிலவியது. பாரதநாடு முழுதும் இந்துக் கோயில்கள் சூரையாடப்பட்ட இருண்ட காலம் அது. காஞ்சியிலும் அதன் எதிரொலியினால், வரதராஜப் பெருமாள் கோயில், காமாட்சி அம்மன் கோயில் போன்ற கோயில்களில் உற்சவ மூர்த்திகள் மறைத்து வைக்கப்பட்டன.
1639இல் மூன்றாம் ஸ்ரீரங்கராயர் எனும் அரசப் பிரதிநிதியினால் இம்மாவட்டம் சீர்பெற்றுத் திகழ்ந்தது. இவரிடமிருந்து ஆங்கிலேயர் சென்னையில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ள இடத்தை மானியமாகப் பெற்றனர். பிறகு கோல்கொண்டா சுல்தான்கள் தென்கிழக்கு இந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதும் காஞ்சிபுரமும் அவர்கள் வசமாயிற்று.
1687 இல் கோல் கொண்டாவை முகலாயர் கைப்பற்றியதும் காஞ்சிபுரமும் கர்நாடகமும் முகலாயப் பேரரசின் வசமாயின.
18 ஆம் நூற்றாண்டில் ஆதிக்கவெறி கொண்டு ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் மோதியப் போர்களால் செங்கற்பட்டும் காஞ்சிபுரமும் பலத்தத் தாக்குதல்களுக்கு இலக்காயின. பிரெஞ்சுக்காரர்கள் தோல்வியுற்று, ஆங்கிலேயர்கள் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். ஆங்கிலேயர்கள் தமக்குச் செய்த சேவை காரணமாய் ஆற்காட்டு நவாப் மகமதலி 1763 இல் காஞ்சிபுரம் மாவட்டத்தை அவர்களுக்கு நிரந்தரமாக வழங்கினார். ஆங்கிலேயர் ஆட்சியும் 1947இல் முடிவுற்றது.

காஞ்சிபுரம் பற்றிய இலக்கிய குறிப்புகள்:
காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது.
கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவரிகளின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், ,கலை மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் இப்பகுதி தொண்டை மண்டலம் என குறிப்பிடப்பட்டது. பல்லவர்களின் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது. மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது.

“நகரேஷூ காஞ்சி” – “நகரங்களுள் காஞ்சி” என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் காஞ்சி நகரத்திற்கு கௌதம புத்தர் வருகை புரிந்தார் என்று கூறியுள்ளார்.

வேகவதி ஆற்றின் கரையில், வடநாடும் தென்னாடும் வணங்கிப் போற்றும் தொண்டைமான் இளந்திரையன் என்ற குறுநில மன்னனால் ஆளப்பட்ட பழைய நகரம் காஞ்சி மாநகரமாகும். இக்காஞ்சி மாநகரத்தை மேலும் செப்பம் செய்து கடிநகராக்கினான், கரிகால் பெருவளத்தான் எனும் சோழப் பேரரசன். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் போன்ற சமயங்கள் காஞ்சி மாநகரைக் கண்டிருக்கின்றன. தெய்வநலம் மணக்கும் திருநகரம் காஞ்சி மாநகரமாகும்.

திரும்பிய பக்கமெல்லாம் கோவில்களும் கோட்டங்களும் நிறைந்துள்ள இந்நகரில் கச்சி ஏகம்பனே! என்றும், காஞ்சி வரதப்பா! என்றும் வணங்கி நிற்போர் பலர். புத்த சமயத்தைச் சார்ந்த அறவண அடிகள் காஞ்சியில் வாழ்ந்தார். இந்நகரில்தான் மாதவியின் மகளான மணிமேகலை துறவு பூண்டு புத்த சமயக் கொள்கைகளைக் கற்றறிந்தாள். அறவண அடிகள் தங்கியிருந்த அவ்விடம் இன்று அறவணஞ்சேரி என்றும், அறப்பணஞ்சேரி என்றும் வழங்கப்படுகிறது.

நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக விளங்கியவர் காஞ்சியில் பிறந்த தருமபாலர் என்னும் தத்துவ ஞானி ஆவார். திருப்பருத்திக்குன்றம் என்னும் இடத்தில் சமணர்கள் நிறைந்து வாழ்ந்த காரணத்தால் அவ்வூர் சமணக்காஞ்சி (ஜைனக்காஞ்சி) என்று வழங்கப்படுகிறது.
ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்த பல்லவர்களின் காலத்தில் கலைமகளும், திருமகளும் கலந்து உறைந்திருந்த காரணத்தால் கல்விக் கரையிலாக் காஞ்சி மாநகர் என்று அப்பர் சுவாமிகளால் அருளப்பெற்றது.
முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முக்கியமானதும், புராண வரலாற்றுப் பெருமைகள் நிறைந்ததுமான காஞ்சிபுரம் ஒரு கோவில் நரகமாகும்.
சிற்பக் கலையில் சிறந்து, கலை நுணுக்கத்தில் உயர்ந்து, வான்முட்டி நிற்கும் கோபுரங்கள் ஏராளம்! சிற்பங்களைச் செதுக்கி, அழகு படுத்தப்பட்ட உயர்ந்த தூண்கள் எழில் கூட்டுகின்றன. எங்கு நோக்கினும் எண்ணத்தைக் கொள்ளை கொள்ளும் எழில் கொஞ்சும் இறைவன் திருமேனிகள் கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆழ்வார்களும், நாயன்மார்களும், சீன நாட்டின் நல்லறிஞர்களும் போற்றிப் புகழ்ந்த இம்மாநகரின் மிக முக்கிய ஆலயங்களின் தரிசனம் காண, இந்நூலை உங்கள்முன் படைக்கிறேன்.

சிறப்புகள்:

இந்தியாவில் மொத்தம் 7 முக்தி ஸ்தலங்கள் உள்ளன. அவற்றில் காஞ்சிபுரமும் ஒன்று. மேலும் காஞ்சி பட்டுக்கு மட்டுமல்ல, கலை, கலாசாரம் போன்றவற்றிலும் சிறந்து விளங்கும் ஊராகும்.
காஞ்சிபுரம் நமது தமிழகத்தின் பாரம்பரிய சின்னமாகவும் திகழ்கிறது. இங்கே ஓடும் நதி பாலாறு ஆகும்.
காஞ்சிபுரம் “ஆயிரம் கோவில் நகரம்” என்று அழைக்கபடும் நகரம் ஆகும். இது பஞ்ச பூதங்களில் ஒன்றாக விளங்கப்படுகிறது.

“திருவாரூரில் பிறக்க முக்தி,
காஞ்சியில் வாழ முக்தி,
காசியில் இறக்க முக்தி,
திருவண்ணாமலையை நினைக்க முக்தி”
என்ற வரிகள் மூலம் காஞ்சியின் சிறப்பை அறிய முடிகிறது.

கோவில்கள்:

ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகரமாக மகோன்னதச் சிறப்புகளுடன் இருந்த மாநகரம் காஞ்சிபுரம்.பின்னர் சேரர்கள் விஜயநகரப் பேரரசு, நாயக்கர் காலம் என்று வரலாற்றில் தொடந்து புகழ் பெற்ற நகரம்.
சுமார் ஆயிரம் கோவில்கள் இங்கு கட்டபட்டிருப்பதாக சொல்வார்கள். தற்போது எஞ்சியிருப்பவை சுமார் 100 கோவில்கள் இருக்கலாம்.காஞ்சி நகரத்தின் எந்த சிறு தெருவிலும் ஒரு கோவில் இருக்கும்,ஒரு வரலாறு இருக்கும்.
நமது பாரம்பரியம், வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது.
தெற்கே விஷ்ணு காஞ்சி,வடக்கே சிவகாஞ்சி – இப்படி இரண்டாக பிரிக்கபட்டுள்ளது இந்த நகரம்.சிவகாஞ்சியில் சிவன் கோவில்கள் அதிகம்,விஷ்ணுகாஞ்சியில் வைணவ கோவில்கள் அதிகம். இது கோயில்களுக்கு சிறப்பு பெற்ற ஊர் ஆகும். பல்லவர், சோழர், விஜயநகர பேரரசர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில்,சுப்பரமணிய சுவாமி கோவில், கட்பேசுவரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் போன்ற பல கோவில்கள் ஆகியவை சிவகாஞ்சியில் உள்ளன.இதை பெரிய காஞ்சிபுரம் என்பார்கள்.தெற்கே சின்ன காஞ்சிபுரம் அல்லது விஷ்ணு காஞ்சியில் இருப்பது வரதராஜ பெருமாள் கோவில்.

காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

பாரம்பரியம்,வரலாறு ஆகியவை மீது ஈடுபாடு கொண்ட அனைவரும் பார்க்கவேண்டிய இடம் இது. பாரம்பரியம் மிக்க இந்த நகரில் இருந்து அறிஞர் அண்ணா புறப்பட்டு வந்ததில் வியப்பேதுமில்லை

kanchipuram

History:

The trees are in kanchi ‘ ‘ kanchi ‘ from the name of ‘ kanchi ‘ Kāñcaṉam means golden city is meant to be. On that day, this word stands for the great cīrum of kanchipuram During the period of sangam, we became a king of kanchi and lover Pallavas are named kanchi of In the time of Palm Mountain Temple, Palm Temple, māmallapurak temple, kanchi temple, kanchi is constructed. Pallava Kingdom ki. Status status after b. 949 Kanchi approach is king captured
Then kanchi was a part of kanchi During the period of cholas, it was called as throat zone.
Chola’s Empire was among in 13th century, and he has sun the region.
Then, in 1393, kancheepuram is the technology district of the and in district in 1393 In th century, the kingdom of the government ruled by the kingdom of the government and the new ālayaṅkaḷiṉ in the rule of the government and the new ālayaṅkaḷiṉ in the rule of the government and the ālayaṅkaḷiṉ. In Ēkamparanātar Temple, Krishna Deva Tower. Vijayanagara Empire was lost at 1565
There is hell in kanchi and chaos in kanchipuram. Hindu country is full of Hindu temples. In kanchi its, Varadaraja Perumal Temple, Kamakshi Amman Temple are hide in temples.
In 1639, this district was very strong by government representative. From The British, in Chennai, st George Fort was built by st George Fort. After the goal of goal sultans South East India has won the success of kanchi puramum as they are vacamāyiṟṟu.
Kanchi lawyer and kanchi of kanchi and mughal empire
In the 18th century, the and their are digit and and and to attack. The French people are defeated, the English people are status. The English people. The British rule was done in 1947

Target Tips About Kanchipuram:
Kanchi city is the most ancient cities of South India. There are many places in the history of kanchipuram. About 2500 years ago throat kanchi kanchi kanchi The b of 2th century, occurred
K. B. 4TH CENTURY TO 9th century, the capital of kanchipuram is very good in, arts and Tamil, Sanskrit language in education. Pallava’s period was known as the throat. Pallava’s reign was reached by supreme in kanchipuram. By the rare nears. K. Patanjali by patanjali was

The City of city ” City of kanchipuram is in ancient times in ancient times. In Ancient times, in this city, the vēkavati river has been, nirmāṇik. Chinese historical teacher yuan chuang According to his note of kanchipuram, the 6 mile of cuṟṟaḷaviṟku was far, and the people of the education had been given in the great time. And he said he was visit in kanchi city

In the stains river, the north of the north country,,,,, is the old city of kanchipuram. The King of this, Charcoal, Charcoal, Charcoal, Charcoal King, charcoal Saiva ma to found kanchi, vaishnavism, sa, cākkiyam Gods city is kanchi city

Back side of the temple and temple in this city is perfect! Eṉṟum, kanchi! There are many war in the war. The Buddhist feet were lived in kanchipuram. In this city, he daughter tuṟavu tuṟavu of tuṟavu. The Aṟavaṇa were being added to the aṟavaṇa of aṟavaṇa and to be added to the aṟappaṇañ.

Nalanda was piye as a leader of nalanda nalanda In the place of Mr., the place of jain are filled with jain.
In hundred years, the kingdom and’s time was the kingdom and the daughter of.
Mutti purer and important, epic historic and proud of a temple in kanchipuram.
There are great towers in statue, high and vāṉmuṭṭi towers Done and crop sculptures and beautiful pillars beautiful Where, ezhil.
Deep, nāyaṉmārkaḷum, the most important ālayaṅkaḷiṉ darshan of the world’s most important ālayaṅkaḷiṉ to see the most important ālayaṅkaḷiṉ of the country.

Specials:

Totally 7 Mukti urges in India. There are one of kanchi puramum And not only kanchi is the best of the culture, and the culture of culture.
Kancheepuram is the traditional icon of our Tamil Nadu Here are the river of river pālāṟu.
Kanchipuram is the city called “thousand temple city” This is a pancha filled together.

” Mr. is mukti,
Live in kanchi mukti,
Kashi to die in kashi,
Tiruvannamalai thinks mukti ”
The lines of kanchi is known as kanchi

Temples:

In a time the of’s capital was. After the add of Vijayanagara Empire, the famous city in the history of nayakkar’s are the famous city.
Nearly a thousand temples will say. Now there may be 100 temples of eñciyiruppavai. There will be a history of kanchipuram which is a temple of kanchipuram.
This is where everyone wants to visit our tradition, history and history.
South of vishnu kanchi, North of shiv – this is divided in this city. Shiva kanchi, Sivan Temples, Vishnu in kanchi vaishnava This is a special town for temples. Pallava Dynasty, chola, vijayanagar empire were built in many temples. Kailasanathar Temple, kāmāṭciyam’maṉ temple, ēkāmparanātar temple, cuppara, hours swamy temple, cut temple, Vaikuntha Perumal Temple, many temples are in Shiva. This is big kanchipuram my bars. South of kanchipuram or Vishnu Kanchipuram to varatarāja perumal temple.

Very popular in kanchipuram necavuttoḻilu Here are the kanchi of kanchi silk sarees.

This is the place where everyone is involved in tradition, history and history. Scholar Anna from this town.